Home » 2014 » October » 22 » நள்ளிரவில் அமைச்சர் விசிட் , கோயம்பேடு அதிர்ச்சி !
7:49 AM
நள்ளிரவில் அமைச்சர் விசிட் , கோயம்பேடு அதிர்ச்சி !

நேற்று நள்ளிரவு தீபாவளி சிறப்பு பேருந்துகளின் செயல்பாட்டினை காண திடீர் விசிட் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.அவரது திடீர் வருகையை அறிந்த போலீஸ் அதிகாரிகள் ஒரே ஓட்டம் பிடித்து கோயம்பேடு வந்தபோது, ''எதற்க்கு இங்கு வந்தீர்கள்.உங்கள் ரௌண்ட்ஸை போய் பாருங்கைய்யா.இது என்னோட வேலை.செக் பண்ணீட்டிருக்கேன்.'' என்று கூற போலீசாரே ஆச்சரியத்துடன் திரும்பினர்.அப்போது அங்கு திரண்டிருந்த பயணிகளிடம் போக்குவரத்து வசதிகள் பற்றி விசாரித்த அவர்,குறை ஏதும் இருந்தால் தாராளமாக எனது அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று கூறினார்.கட்சி பட்டாளம்,காவல் அதிகாரிகள் என்று யாரும் அவருடன் இல்லை.தனியாக வந்தார்.அவர் வந்ததை கேட்டு வந்த அதிமுகவினரையும் ஊருக்கு கிளம்புவதென்றால் செல்லுங்கள்.இங்கு தேவையற்ற கூட்டம் வேண்டாம் என்று கூறினார்.போட்டோ பிடிப்பவரை கூட நீங்கள் போட்டோ பிடிக்கவேண்டாம் என்று கூறினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Views: 906 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar