24 hour online news website

நேற்று நள்ளிரவு தீபாவளி சிறப்பு பேருந்துகளின் செயல்பாட்டினை காண திடீர் விசிட் செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.அவரது திடீர் வருகையை அறிந்த போலீஸ் அதிகாரிகள் ஒரே ஓட்டம் பிடித்து கோயம்பேடு வந்தபோது, ''எதற்க்கு இங்கு வந்தீர்கள்.உங்கள் ரௌண்ட்ஸை போய் பாருங்கைய்யா.இது என்னோட வேலை.செக் பண்ணீட்டிருக்கேன்.'' என்று கூற போலீசாரே ஆச்சரியத்துடன் திரும்பினர்.அப்போது அங்கு திரண்டிருந்த பயணிகளிடம் போக்குவரத்து வசதிகள் பற்றி விசாரித்த அவர்,குறை ஏதும் இருந்தால் தாராளமாக எனது அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்று கூறினார்.கட்சி பட்டாளம்,காவல் அதிகாரிகள் என்று யாரும் அவருடன் இல்லை.தனியாக வந்தார்.அவர் வந்ததை கேட்டு வந்த அதிமுகவினரையும் ஊருக்கு கிளம்புவதென்றால் செல்லுங்கள்.இங்கு தேவையற்ற கூட்டம் வேண்டாம் என்று கூறினார்.போட்டோ பிடிப்பவரை கூட நீங்கள் போட்டோ பிடிக்கவேண்டாம் என்று கூறினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Views: 512 | Added by: NI | Date: 2014-10-22 | Comments (0)

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் சீரமைப்பு பணிகள் எங்கும் நடைபெறவில்லை என திமுக இளைஞரனி செயலாலர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.ஆனால் அதிகாரிகளிடம் நாம் பேசியபோது அவர்கள் தெரிவித்தது,''சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.சென்னையை பொறுத்தவரை மேயர் சைதை துரைசாமி அவர்களே இறங்கி சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.''

 

                                  பணி செய்யும் பணியாளர் ஒருவரிடம் கேட்டபோது,''மழை இன்று குறைந்துள்ளது.ஆனாலும் பல இடங்களில் மழை காரணமாக நீர் தேங்கியுள்ளது.நேற்று முதல் சுமார் 30க்கும் ஆதிகமான இடங்களில் சீரமைப்பு பணியை செய்துள்ளோம்.விரைவில் சென்னை முழுவதும் பணியை துரிதப்படுத்தி வேலைகளை முடிப்போம்'' என்றார்.

Views: 352 | Added by: NI | Date: 2014-10-21 | Comments (0)

உத்திரபிரதேச கவர்னர் ராம்நாயக் பாஜகவின் கைபாவை என்று கூறுகிறார் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்.தன் அரசை கலைத்து,பாஜகவை அங்கு நிலைநிறுத்த மோடி திட்டமிட்டுள்ளதாகவும்,அதனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.ஆனாலும் தேர்தலில் தன் கட்சி தான் வென்றது என்று கூறியுள்ள அவர்,தன் மீது எல்லா பழிகளையும் சுமத்திபார்த்த மோடி தற்போது கவர்னர் ராம்நாயக் மூலம் அதை நிறைவேற்ற நினைக்கிறார் என்று வெளிப்படையாக மீடியாக்களுக்கு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

Views: 345 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் யாருமே நெருங்க முடியாத வீரப்பனை சுட்டு கொன்றனர் தமிழக போலீஸ்.இதனால் தமிழக போலீசுக்கு மத்திய அரசே பாராட்டு தெரிவித்தது.வீரப்பன் இறந்ததை உறுதிப்படுத்திய பின் போலீசாருக்கு உயர்பதவி உட்பட அனைத்து உதவிகளும் அரசால் செய்து தரப்பட்டது.இந்நிலையில் வீரப்பனின் மனைவி இன்று பத்திரிக்கையாளர்களிடம் வீரப்பனுக்கு நினைவு மணி மண்டபம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Views: 356 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானியர்களின் அத்துமீறல் அதிகரித்துவருகிறது.மேலும் அவர்கள் இந்தியர்கள் மீதும் துப்பாகிச்சூடு நடத்தி வருகின்றனர்.இதனால் கடந்த வாரம் மட்டும் காஷ்மீர் பகுதியில் 27 இந்தியர்கள் இறந்தனர்.

                            இதை பற்றி மத்திய அரசு என்ன கவனிக்கிறது என்று பார்த்தால் வெறும் பேச்சுதான் மத்திய அரசிடம் இருந்து வருகிறது.பதில் தாக்குதல் என்பது குறைவாகவே உள்ளது.இன்று அதிகாலை மீண்டும் பாகிஸ்தானியர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர்.ஆனால் இதை எல்லாம் பார்த்தும் பார்க்காததை போல பிரதமர் மோடி,இந்தியா மருத்துவ துறையில் பின்தங்கி இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி  42-வது பட்டமளிப்பு விழாவில் பேசினார்.துளியும் கூட பாகிஸ்தானியர்களின் அத்துமீறல் பற்றி பேசவில்லை.பத்திரிக்கையாளர்கள் இதை பற்றி கேட்க வந்தபோதும்கூட,அவரது பாதுகாவலர்கள் அவரை நெருங்கவிடவே இல்லை.

 

எய்ம்ஸ் ... Read more »

Views: 328 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள சங்கராச்சாரியார்,தலீத் இனத்தவர்களை,கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று தெரிவித்திருந்தார்.இதுவரை இதற்க்கு எதிர்ப்பு வராத நேரத்தில் அம்மாநில பாஜகவினர் அதற்க்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அம்மாநில பாஜக தலைவர் ஒருவர் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த பேட்டியில்,

''ஹிந்துக்களுக்கும்,பிராமனர்களுக்கும்தான் கோவிலில் அனுமதி கொடுக்கவேண்டும்.தலீத் இனத்தவர்களுக்கு கோவிலில் அனுமதி மறுக்கப்படவேண்டும்.சங்கராச்சாரியார் அவர்கள் தெரிவித்ததை நாங்கள் ஏற்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Views: 309 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

முன்னால் நடிகர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளரான திரு.சோ ராமசாமி அவர்களை விரைவில் ஜெயலலிதா சந்திக்க உள்ளார் என்று தெரிகிறது.தான் சிறையில் இருந்தபோது,தனக்கு ஆதரவாக இருந்தமைக்கு நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Views: 558 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பறி,தனிபெரும் கட்சியாக பாஜக உள்ளது.இந்நிலையில் நேற்று 10 நிமிடங்கள் மொபைலில் உத்தவ் தாக்கரேவிடம்,அமித் ஷா பேசியுள்ளார்.மேலும் மராட்டிய பாஜக,சிவசேனா கூட்டனி உறுதி என்று தெரிவித்து வருகிறது.தேசியவாத காங்கிரஸ்,வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது.ஆனால் இந்த ஆதரவை ஏற்பது பற்றி பாஜக இன்னும் முடிவெடுக்கவில்லை.இன்று அதைபற்றிய முடிவு எடுக்க உள்ளனர்.ஆனால் தேசிவாத காங்கிரஸின் ஆதரவு தேவையற்றது என்று தெரிவித்து வருகின்றனர்.

Views: 292 | Added by: NI | Date: 2014-10-20 | Comments (0)

மராட்டியம் மற்றும் ஹரியானா மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.தன்னிச்சையாக போட்டியிட்டதால் வாக்கு சிதறல் ஏற்பட்டு பாஜகவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளது என்றும்,இனி வரும் தேர்தல்களில் இதுபோன்ற நிலைவராமல் இருக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்ட அவர்,அம்மாவட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

Views: 317 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

பாஜக - சிவசேனா கட்சிகள் தங்கள் 25 ஆண்டுகால கூட்டனியை மராட்டிய மாநில தேர்தலுக்காக உடைத்தனர்.இதனால் 5 முனை போட்டி நிலவியது.வாக்குகள் சிதறும் என்று எதிர்பார்த்ததை போல சுயேட்சைகள் 18 பேர் தேர்வாகியுள்ளனர்.தற்போது பாஜகவுக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்ததால் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

                                         அதேவேளையில் எதிரி கட்சியின் ஆதரவை மட்டுமே நம்பி ஆட்சி அமைக்க முடியாது என்பதால் சிவசேனாவிடம் பேசிவருகிறது பாஜக.ஆனால் சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே,பாஜக இதுவரை கூட்டனி பேச வரவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அதேவேளையில் கூட்டனி பேச வந்தால் துனை முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே வைப்போம்.பாஜக ஒப்புக ... Read more »

Views: 347 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

1 2 3 »