Home » 2014 » October » 20 » மீண்டும் எல்லை மீறிய பாகிஸ்தான் , அதை கவனிக்காமல் பிரதமர் மோடி மருத்துவ ஆராய்ச்சி பற்றி பேச்சு !!
3:25 PM
மீண்டும் எல்லை மீறிய பாகிஸ்தான் , அதை கவனிக்காமல் பிரதமர் மோடி மருத்துவ ஆராய்ச்சி பற்றி பேச்சு !!

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தானியர்களின் அத்துமீறல் அதிகரித்துவருகிறது.மேலும் அவர்கள் இந்தியர்கள் மீதும் துப்பாகிச்சூடு நடத்தி வருகின்றனர்.இதனால் கடந்த வாரம் மட்டும் காஷ்மீர் பகுதியில் 27 இந்தியர்கள் இறந்தனர்.

                            இதை பற்றி மத்திய அரசு என்ன கவனிக்கிறது என்று பார்த்தால் வெறும் பேச்சுதான் மத்திய அரசிடம் இருந்து வருகிறது.பதில் தாக்குதல் என்பது குறைவாகவே உள்ளது.இன்று அதிகாலை மீண்டும் பாகிஸ்தானியர்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர்.ஆனால் இதை எல்லாம் பார்த்தும் பார்க்காததை போல பிரதமர் மோடி,இந்தியா மருத்துவ துறையில் பின்தங்கி இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி  42-வது பட்டமளிப்பு விழாவில் பேசினார்.துளியும் கூட பாகிஸ்தானியர்களின் அத்துமீறல் பற்றி பேசவில்லை.பத்திரிக்கையாளர்கள் இதை பற்றி கேட்க வந்தபோதும்கூட,அவரது பாதுகாவலர்கள் அவரை நெருங்கவிடவே இல்லை.

 

எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி  42-வது பட்டமளிப்பு விழாவில் அவர், ''மருத்துவ ஆராய்ச்சி துறையில் இந்தியா பின்தங்கி உள்ளது. அதிகமான ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும்.எய்ம்ஸ்சில் இருந்து வெளியே போனாலும் சமூகத்திற்கு தங்களால் முடிந்ததை டாக்டகள் செய்யவேண்டும்.டாக்டர்கள் தொலை தூரத்தில் உள்ள ஏழைகளுக்காக வருடத்தில் ஒரு வாரமாவது சேவை செய்யவேண்டும்.நீங்கள் மிகவும் அதிர்ஷடசாலி  எய்ம்ஸ் போன்ற  நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறீர்கள்.நீங்கள் இந்திய தாயின்  குழந்தைகள்  நீங்கள் உங்கள் சமூகத்திற்காக திரும்ப அதிக அன்பை கொடுப்பீர்கள்  என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இந்திய மருத்துவர்கள் உலகம் முழுவதும் பெயர் பெற்று உள்ளனர். ஆனால் நம் நாடு மற்ற நாடுகளை விட  ஆராய்ச்சி துறையில் பின்தங்கி உள்ளது.ஆராய்ச்சி துறையில் நாம் சாதனை படைக்கும் வகையில் அதிக கவனம் செலுத்த வெண்டும்.நோயாளிகள்  விஷயத்தில் தான் நாம் சாதனை படைத்து உள்ளோம்.இன்னும் இரண்டு  மூன்று ஆண்டுகளில் எங்களுக்கு நம்பிக்கையான தகவலை தாருங்கள்.உங்கள் மத்தியில் சிலர்  ஆராய்ச்சி விஞ்ஞானிகளாக  ஆக முடியும்'' என்று தெரிவித்தார்.

Views: 711 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar