Home » 2014 » October » 19 » இன்றைய ராசி பலன்
6:04 AM
இன்றைய ராசி பலன்

மேஷம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
 

ரிஷபம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 

மிதுனம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 

கடகம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 

கன்னி

எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

 

துலாம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

 

விருச்சிகம்

எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

 

தனுசு

கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கோபம் குறையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 

மகரம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 

கும்பம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 

மீனம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
Views: 162 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar