Home » 2014 » October » 19 » மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை !!
5:49 AM
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை !!

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் கடந்த 13ஆம் தேதி நடந்த வாக்கு பதிவின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.மஹாராஷ்டிராவில் பாஜக,காங்கிரஸ்,சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் என்று பல முனை போட்டி நிலவியது.அதேபோல ஹரியானாவில் முன்னால் முதலமைச்சர் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம்,பாஜக,காங்கிரஸ் என்று மும்முனை போட்டி நிலவியது.இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.அதேவேளையில் தனி பெரும்பான்மை என்பது யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.பாஜக அதிக இடம் வென்றாலும் கூட்டனி வைக்கவேண்டிய நிலை ஏற்படும்.அவ்வேளையில் சிவசேனா ஆதரவு கிடைக்காது.தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஏற்கனவே பேசி வைத்தது போல கூட்டனி வைக்க நேற்று இரவு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.ஒருவேளை சிவசேனா காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்.அதேவேளையில் முதல்வர்,துனை முதல்வர் என்று பதவிகள் பிரிக்கப்படும்.ஒருவேளை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் பட்சத்தில் ஆட்சி அமைக்கலாம்.

ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க எப்படியும் 12 இடங்கள் கூடுதலாக தேவைப்படும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.சுயேட்சைகள் 4 பேர் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் பாஜக அந்த 4 நபர்களை இழுத்துக்கொண்டாலும் மீதி 8 பேருக்கு சவுதாலா கட்சியை தான் தொங்கவேண்டும்.சிறை சென்றவரின் ஆதரவு தேவையில்லை என்று கூறிய மோடி ஆட்சி அமைக்க சவுதாலா கட்சியை நாடுவாரா இல்லை ஜனாதிபதி ஆட்சி நடக்குமா என்பது இன்று பிற்பகல் 1 மணிக்கு தெரிந்துவிடும்.

Views: 443 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar