Home » 2014 » October » 19 » ஆசிட் வீச்சு பற்றி நியூஸ் இந்தியா கொடுத்த அறிவுரைகளை ஏற்றது தமிழக அரசு !!
5:14 PM
ஆசிட் வீச்சு பற்றி நியூஸ் இந்தியா கொடுத்த அறிவுரைகளை ஏற்றது தமிழக அரசு !!

மதுரை மாவட்டம் திருமங்களத்தில் ஆசிட் வீச்சு விவகாரத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு 10 நிபந்தனைகளை தமிழக அரசுக்கு நியூஸ் இந்தியை வைத்தது.அவை,

  1. ஆசிட் போன்ற அமிலங்களை முற்றிலுமாக தடை செய்யவேண்டும்.
  2. தடையை மீறி விற்க்கும் நபர்களுக்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படவேண்டும்.
  3. பெண்களுக்கு என கொண்டுவரப்பட்ட சட்டங்களை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளலும் நடைமுறைப்படுத்தவேண்டும்.
  4. நடைமுறைப்படுத்தாத கல்லூரிகள் இழுத்து மூடப்படவேண்டும்.
  5. பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படவேண்டும்.
  6. பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஒரு குறிப்பு எண்/குறிப்பு எழுத்து (PASSWORD) சொல்லிக்கொடுத்து இந்த குறிப்பை சொல்லி யாராவது வந்து கூப்பிட்டால் மட்டுமே அவர்களுடன் குழந்தைகள் செல்லவேண்டும்.
  7. தெரிந்த நபராக இருந்தாலும் கூட யாரிடமும் தங்களது ரகசிய குறியீட்டை தெரிவிக்கக்கூடாது.
  8. கல்லூரி பயிலும் பெண்களுக்கு அரசின் சட்டதிருத்தங்கள் தெரியப்படுத்தப்படவேண்டும்.அவர்களுக்கு உரிய பாதுகாப்பை கல்லூரியும்,போலீசாரும் தரவேண்டும்.
  9. தினமும் 2 முறையாவது நேரம் கடைபிடிக்காமல் எதிர்பாராத நேரத்தில் திடீர் திடீரென்று போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் அந்தந்த பகுதி போலீசார் சோதனையிடவேண்டும்.அமிலங்கள் விற்கப்படுகிறது என்று தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
  10. போலீசார் நடிவடிக்கை எடுக்காத பட்சத்தில் அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்க்கென்று ஒரு தனி பிரிவை உருவாக்கி அதில் புகார் தரும் வழிமுறைகளை அரசு பின்பற்றவேண்டும்.

இதில் கிட்டத்தட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் திரு.மோகன் வர்கீஸ் சுங்கத் தெரிவித்தார்.மேலும் இந்த விபரங்களை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்பே பார்த்ததாகவும்,அவர் ஏற்கனவே ஆணையிட்டதன் பேரில் சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார.

Views: 398 | Added by: NI | Rating: 5.0/1
Total comments: 0
avatar