Home » 2014 » October » 19

மராட்டியம் மற்றும் ஹரியானா மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.தன்னிச்சையாக போட்டியிட்டதால் வாக்கு சிதறல் ஏற்பட்டு பாஜகவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளது என்றும்,இனி வரும் தேர்தல்களில் இதுபோன்ற நிலைவராமல் இருக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்ட அவர்,அம்மாவட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

Views: 577 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

பாஜக - சிவசேனா கட்சிகள் தங்கள் 25 ஆண்டுகால கூட்டனியை மராட்டிய மாநில தேர்தலுக்காக உடைத்தனர்.இதனால் 5 முனை போட்டி நிலவியது.வாக்குகள் சிதறும் என்று எதிர்பார்த்ததை போல சுயேட்சைகள் 18 பேர் தேர்வாகியுள்ளனர்.தற்போது பாஜகவுக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக அறிவித்ததால் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

                                         அதேவேளையில் எதிரி கட்சியின் ஆதரவை மட்டுமே நம்பி ஆட்சி அமைக்க முடியாது என்பதால் சிவசேனாவிடம் பேசிவருகிறது பாஜக.ஆனால் சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே,பாஜக இதுவரை கூட்டனி பேச வரவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.அதேவேளையில் கூட்டனி பேச வந்தால் துனை முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே வைப்போம்.பாஜக ஒப்புக ... Read more »

Views: 642 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

ஹரியானா முதல்வர் ஹூடா தன் பதவியை ராஜினாமா செய்தார்.கவர்னர் மாளிகை வந்த அவர் அடுத்து பாஜக அரசு அமையவுள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை கொடுக்க,கவர்னர் அதை ஏற்றுக்கொண்டார்.
 

Views: 389 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

மராட்டிய மாநில தேர்தல் கடந்த 13ஆம் தேதி நடந்தது.இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.இதில் பாஜக 120 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் பாஜகவுக்கு தனிபெரும் கட்சி என்ற அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது.

              அதேபோல சிவசேனாவும்,மாநில மக்களின் நலன் கருதி பாஜக கூட்டனியில் இணைய முன்வந்துள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.ஆனாலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது.இதனால் 122+63+41 என்று 226 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது பாஜக.அதேவேளையில் துனை முதலமைச்சர் என்ற பதவியை உருவாக்கி உத்தவ் தாக்கரேவுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: 405 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

மதுரை மாவட்டம் திருமங்களத்தில் ஆசிட் வீச்சு விவகாரத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு 10 நிபந்தனைகளை தமிழக அரசுக்கு நியூஸ் இந்தியை வைத்தது.அவை,

  1. ஆசிட் போன்ற அமிலங்களை முற்றிலுமாக தடை செய்யவேண்டும்.
  2. தடையை மீறி விற்க்கும் நபர்களுக்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படவேண்டும்.
  3. பெண்களுக்கு என கொண்டுவரப்பட்ட சட்டங்களை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளலும் நடைமுறைப்படுத்தவேண்டும்.
  4. நடைமுறைப்படுத்தாத கல்லூரிகள் இழுத்து மூடப்படவேண்டும்.
  5. பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படவேண்டும்.
  6. பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஒரு குறிப்பு எண்/குறிப்பு எழுத்து (PASSWORD) சொல்லிக்கொடுத்து இந்த குறிப்பை சொல்லி யாராவது வந்து கூப்பிட்டால் மட்டுமே அவர்களுடன் குழந்தைகள் செல்லவேண்டும்.
  7. தெரிந்த நபராக இருந்தாலும் கூட யாரிடமும் தங்களது ரகசிய குறியீட ... Read more »
Views: 400 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

ஜெயலலிதாவுக்கு சற்று நேரத்துக்கு முன்பு போன் செய்த மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி,''வழக்குகளில் இருந்து வெளிவந்து,சோதனைகளை தாண்டி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்கவேண்டும்'' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

                                                     அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,''சோதனைகளை சாதனைகளாக மாற்றும் தன்மை கொண்ட தாங்கள்,இதுபோன்ற சின்ன சின்ன சோதனைகளை தாண்டி,வெற்றிபடிகளில் ஏறி,மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்

Views: 575 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

மேற்கிந்திய தீவுகள் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்தது.ஆரம்பம் முதலே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போர்டுடனான பிரச்சனையில் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் போட்டியை புறக்கணிப்பர் என்று கூறப்பட்டது.இந்நிலையில் தர்மசாலா போட்டியின் போது இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் அந்த அணியின் பொறுப்பாளர்.

                                                                                       இந்த அதிர்ச்சியை எப்படி சமாளிப்பது என்பதை யோசித்த இந்திய கிரிக்கெ ... Read more »

Views: 405 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை விரைவில் காங்கிரஸை சேர்ந்த ஜி.கே.வாசன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இந்த சந்திப்புக்கு ஜெயலலிதா தரப்பிலும் சம்மதம் அளிக்கப்பட்டதால் விரைவில் இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: 618 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

காஷ்மீர் பாகிஸ்தான் நாட்டுக்கு தான் சொந்தம்.அதை நான் மீட்டெடுத்து பாகிஸ்தான் மக்களோடு நமது இஸ்லாமிய இணத்தினரை இணைத்து காட்டுவேன்.அதுவரை பொருமை காக்கவும்.என்னால் மோடி பயந்துபோய் உள்ளார்.நான் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது.அடுத்த முறை எச்சரிக்கை விடப்போவது இல்லை.போர் தொடுப்பேன்.அதில் வென்று காஷ்மீரை மீட்டெடுப்பேன் என பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார்.

Views: 392 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

அதிமுக பொதுச்செயலாலளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததையடுத்து அவரை காண நேற்று அதிமுக தொண்டர்கள் அலைமோதினர்.இன்றும் கூட வெளியூரில் இருந்து வந்துள்ள அதிமுக தொண்டர்கள் மழையை பொருட்படுத்தாமல் போயன் கார்டன் பகுதியில் குவிந்துக்கொண்டிருக்கின்றனர்.

18 ஆண்டுகள் கடந்த கடந்த மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதாவின் மீது சுப்பிரமணிய சுவாமி கொடுத்த சொத்துகுவிப்பு வழக்கின் பேரில் அவர் சிறை சென்றார்.இதனால் அவரது முதல்வர் பதவியும்,எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது.அதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவோடு,ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தனர்.ஆனால் நீதிபதி சந்திரசேகரா கடந்த 7ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

                              இதை தொடர்ந்து ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் ஜெயலலிதா தரப்பினர்.17ஆம் தேதி ஜாமீன் மனு விசாரனைக்கு வர ... Read more »

Views: 434 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

 

மஹாராஷ்டிரா

பாஜக - 112 இடங்கள் முன்னிலை

காங்கிரஸ் - 46 இடங்கள் முன்னிலை

சிவசேனா - 66 இடங்கள் முன்னிலை

தே.வா.காங்கிரஸ் - 44 இடங்களை முன்னிலை

 

ஹரியானா

பாஜக - 52 இடங்கள் முன்னிலை

காங்கிரஸ் - 12 இடங்கள் முன்னிலை

இந்திய தேசிய லோக் தளம் - 17 இடங்கள் முன்னிலை

Views: 462 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

மஹாராஷ்டிராவில் 120 இடங்கள் வரை பாஜக கைப்பற்றும் என்பது உறுதியாகியுள்ள நிலை தற்போது காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டனி வைப்பது உறுதியாகியுள்ளது.அதேவேளையில் முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையில் இருக்கும் சிவசேனாவுக்கும் - பாஜகவுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.காங்கிரஸ்,சிவசேனா வந்தால் முதலவர் பதவியை விட்டு தருவதாக கூறுவதால் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியுள்ளது பாஜக
 

Views: 343 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

தமிழகம் முழுவதும் கன மழை கொட்டி வருகிறது.வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தொடர் கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.அதேவேளையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Views: 402 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அதை தாங்கிக்கொள்ள முடியாமல்,பலர் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டனர்.அதிலும் மதுரையில் 12ஆம் வகுப்பு மாணவி மரன வாக்குமூலத்தில் அம்மாவை விடுவிப்பதை விட என உயிர் பெரிதில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளிவந்த ஜெயலலிதா இறந்தவர்களின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரனமும்,காயமுற்ற 3 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரனமும் அறிவித்துள்ளார்.யாரும் தன்னம்பிக்கை இழக்க கூடாது,நம்பிக்கையோடு நான் வருவேன் என்று காத்திருக்கவேண்டும் என்று தெரிவித்த அவர்,இது தன் மனதை அதிகம் புன்படுத்தியது போல உள்ளதாகவுதம்தெரிவித்துள்ளார்.

Views: 407 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

ஹரியானாவில் பாஜக 40-50 இடங்களை கைப்பற்றுகிறது.இதன் மூலம் தன்னிச்சையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.அதேவேளையில் சவுதாளாவின் இந்திய தேசிய லோக் தள் கட்சி 20 இடங்களை பெறுகிறது.காங்கிரஸ் 10-15 இடங்களை பெறுகிறது.அதனால் தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு பிரகாசமாக உள்ளது.

Views: 405 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

மஹாராஷ்டிரா தேர்தலில் 110 இடங்கள் முதல் 124 இடங்கள் வரை பாஜக கைபற்றுகிறது.ஆனால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல்.அதே வேளையில் காங்கிரஸ் 50க்கும் அதிகமான இடங்களிலும்,சிவசேனா 60க்கும் அதிகமான இடங்களிலும்,தேசியவாத காங்கிரஸ் 40-45 இடங்களையும் கைப்பற்றுகிறது.தற்போது பாஜக தன்னிச்சையான ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.அதேவேளையில் சிவசேனா ஆதரவை தேடுகிறது.ஆனால் சிவசேனா,காங்கிரஸூடன் கூட்டனி வைக்க முன்வந்துள்ளது.அதேபோல தேசியவாத காங்கிரஸூம்,காங்கிரஸூடன் கூட்டனி வைக்க முன்வந்துள்ளது.அதனால் 1 அல்லது 2 இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கூட்டனி ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு தான் அதிகமாகியுள்ளது.

Views: 353 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

மேஷம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
 
 

ரிஷபம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். நட்பு வட்டம் விரியும். வெளியூ ... Read more »
Views: 424 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் கடந்த 13ஆம் தேதி நடந்த வாக்கு பதிவின் முடிவுகள் இன்று வெளியாகின்றன.மஹாராஷ்டிராவில் பாஜக,காங்கிரஸ்,சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் என்று பல முனை போட்டி நிலவியது.அதேபோல ஹரியானாவில் முன்னால் முதலமைச்சர் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம்,பாஜக,காங்கிரஸ் என்று மும்முனை போட்டி நிலவியது.இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.அதேவேளையில் தனி பெரும்பான்மை என்பது யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.பாஜக அதிக இடம் வென்றாலும் கூட்டனி வைக்கவேண்டிய நிலை ஏற்படும்.அவ்வேளையில் சிவசேனா ஆதரவு கிடைக்காது.தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஏற்கனவே பேசி வைத்தது போல கூட்டனி வைக்க நேற்று இரவு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.ஒருவேளை சிவசேனா காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்.அதேவேளையில் முதல்வர்,துனை ம ... Read more »

Views: 442 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)

இனி விரைந்து செய்திகளை கொடுக்க உள்ளது நியூஸ் இந்தியா !!

தினமும் செய்திகள் 24*7 என்ற ரீதியில் !!

Views: 348 | Added by: NI | Date: 2014-10-19 | Comments (0)